இந்து கடவுளை அவமதித்து ட்விட் செய்த தி.மு.க ஐ.டி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா - கிளம்பிய எதிர்ப்பால் கமுக்கமாக டீவீட்டை டெலீட் செய்தார்

இந்துக்களுக்கு எதிரான ட்விட் போட்ட தி.மு.க தகவல் தொடர்பு பிரிவு தலைவர், பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும் என்று கூறியவுடன் ட்விட்டை டெலிட் செய்துள்ளார்.

Update: 2022-09-07 11:29 GMT

தி.மு.க தனது இந்து மத வெறுப்பை ஆதரிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக இந்து பண்டிகளுக்கு அவர்கள் வாழ்த்துக்கள் கூறாமல் இருப்பது. மற்ற பண்டிகைகளுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களை கூறுவது போன்ற பல்வேறு செயல்களை அவர்கள் ஒரு தலைப்பட்சமாக செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆளும் தி.மு.க தகவல் தொடர்பு பிரிவு தலைவர் மற்றும் தி.மு.க MLAமான TRP. ராஜா இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் ட்விட் ஒன்றை செய்துள்ளார்.


டி.ஆர்.பி.ராஜா நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விஷ்ணு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரை மோசமாக சித்தரித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் குறிப்பாக இந்து மத கடவுளான விஷ்ணு கருட வாகனத்தில் கீழ் இருக்கும் படியும், சுதந்திர போராட்ட வீரர் சாகர் மேல் இருக்குமாறு ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். கருடனின் மீது ஏற்றப்பட்ட கருப்புப் பறவையின் மீது வீர் சாவர்க்கரின் உருவம் பதித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். எனவே இவருடைய இந்த ஒரு ட்விட்டர் பதிவு இந்து சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.


ஆனால் அவருக்கு தெரியாதது என்னவென்றால் இப்படிப்பட்ட ட்விட்களை பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் கைது வரை செல்லலாம். மேலும் அவர்களை கண்காணிப்பதற்கு தனியாக ஒரு குழுவும் தற்போது செயல்பட்டு வருகின்றது. கலவரம், ஆன்லைன் மோசடிகள், போதைப்பொருள் கடத்தல், போன்ற சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்காணிக்கும் வகையில், 'சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு' அமைக்கப்படும் என தமிழக காவல்துறை திங்கள் கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக தி.மு.க MLA மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன் பின்னர் அவர் தன்னுடைய பதிவை டெலிட் செய்துள்ளார். T.R.P. ராஜா இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. இந்திய குடியரசு தினத்தன்று, டி.ஆர்.பி ராஜா, "இவர் எந்த சுதந்திரப் போராட்ட வீரர்?" என்று இந்துக் கடவுள் காமதேனுவின் படத்தைப் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Input & Image courtesy: Thecommunemag News

Tags:    

Similar News