திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., பா.ஜ.க.வில் இணைகிறார்.!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நேரத்தில் திமுக எம்.எல்.ஏ., ஒருவர் பாஜகவில் இணைவதால் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதைதான் தோன்றுகிறது.
திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்லி வருகின்றார். ஆனால் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் எம்.எல்.ஏ., சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ., சரவணன் இணைகிறார். மேலும், அவருடன் பல்வேறு தொண்டர்களையும் பாஜகவில் இணைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மதுரை மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.