மதுக்கடைகளை மூடுவோம்ன்னு நாங்க எப்போ வாக்குறுதி கொடுத்தோம் - கனிமொழி பேச்சால் அதிர்ந்த பெண்கள்

Update: 2022-04-24 12:44 GMT

திமுக தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை நாங்கள் முழுவதுமாக மூடுவோம் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆனால் படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியிருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். அப்போது மாணவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் ஒரு மாணவி மட்டும், தேர்தல் சமயத்தில் மதுவை ஒழிப்போம் என்று சொல்லியிருந்தீங்களே, அப்படி ஆனால் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவீர்களா? மதுவால் அப்பா, அண்ணன், தம்பியை இழந்து பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்றார். இதனால் மதுபானம் விற்பனை தடுத்து நிறுத்தப்படுமா என்றார்.

இதற்கு பதில் அளித்த கனிமொழி, திமுக தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று கூறவில்லை. ஆனால் கடைகளை மட்டும் படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவரது பேச்சால் மாணவிகள் மட்டுமின்றி பெண்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் ஒரு பேச்சும், தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சும் பேசுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News