தொழிலாளி கொலை! பிரேத பரிசோதனை அறிக்கைக்கு முன்பே கடலூர் தி.மு.க. எம்.பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு?
கடலூர் திமுக எம்.பி. பி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி கோவிந்தராஜ் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. கோவிந்தராஜின் உடல் கடந்த செப்டம்பர் 23ம் தேதி பிற்பகல் விழுப்புரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் கோவிந்தராஜின் மீது கொடுரமான முறையில் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. அதாவது தலையின் பின்புறத்தில் ஸ்கல் உடைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது. கோவிந்தராஜ் மரணத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொடுத்த அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா பணிக்கன் குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது திமுக எம்.பி. டி.ஆர்.வி. ரமேஷ் குடும்பத்திற்கு சொந்தமான முந்திரி ஆலை. இந்த ஆலையில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் முந்திரியை ஹீட் செய்து உடைத்து பதப்படுத்தும் வேலையை செய்து வந்தார்.
முந்திரி ஆலைக்கு உரிமையாளர் எம்.பி. ரமேஷ் அடிக்கடி வருவார் என்று சொல்லப்படுகிறது. இதன் தொழில் குறித்தும் அடிக்கடி விவாதித்துள்ளார். ரமேஷுக்கு என்று தனியாக அறை உள்ளது. கடந்த செப்டம்பர் 19ம் தேதி மாலையில் முந்திரி ஆலைக்கு சென்ற ரமேஷ் தனது அறையில் மது அருந்தியுள்ளார். இவருக்கு தொழிலாளி கோவிந்தராஜ் பற்றிய சில தகவல்களை தனது நிர்வாகிகள் மூலமாக கேள்விப்பட்டுள்ளார் ரமேஷ்.
முந்திரியை ஆலையில் இருந்து கொஞ்சம் முந்திரியை எடுத்து சென்று வெளியில் விற்பனை செய்துள்ளார் என்று கோவிந்தராஜ் மீது ரமேஷுக்கு சென்ற புகார் ஆகும். அன்றைய நாள் மது அருந்திக் கொண்டிருந்தபோது, கோவிந்தராஜை வரவழைத்து ரமேஷ் எம்.பி. மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து கடுமையாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோவிந்தராஜிக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவரது மேனேஜர் மற்றும் சில ஆட்கள் சேர்ந்து நள்ளிரவு காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.