தி.மு.க எம்.பி ரமேஷின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி !

Update: 2021-10-24 09:15 GMT

கடலூரில் முந்திரி கம்பெனியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் கைதாகியுள்ள கடலூர் தி.மு.க எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் பணியாற்றிவந்த ஊழியர் கோவிந்தராசு மா்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தி.மு.க எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்.

அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டா். இந்நிலையில், ரமேஷ் சார்பில் ஜாமீன் கேட்டு, அவருடைய வழக்குரைஞா் சிவராஜ் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இந்த கொலை வழக்கில் முகாந்திரம் உள்ளது. எனவே ரமேஷ்க்கு ஜாமீன் தரக் கூடாது என்று சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தி.மு.க எம்.பி ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Source - Asianet NEWS

Tags:    

Similar News