தி.மு.க., ஆட்சியின் போது டெண்டரில் பல கோடி ஊழல்.. முதலமைச்சர் குற்றச்சாட்டு.!

தி.மு.க., ஆட்சியின் போது டெண்டரில் பல கோடி ஊழல்.. முதலமைச்சர் குற்றச்சாட்டு.!

Update: 2020-12-22 17:21 GMT

திமுக ஆட்சிக் காலத்தில்தான் டெண்டர் விடப்பட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. 

பொங்கல் பரிசு வழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகின்றார். நான் முதலமைச்சர் ஆனதில் இருந்து ஸ்டாலின் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில் தான் டெண்டர்கள் விட்டதில் தில்லு முல்லுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் டெண்டர்களில் தான் ஊழல் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தை போன்று டெண்டர் இல்லை, தற்போது இ- டெண்டர் விடப்படுகிறது. அதில் முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை. அவர்களின் ஆட்சியில் நடந்த டெண்டர்களில் தான் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலம், புதிய தலைமை செயலகம் கட்ட ரூ.200 கோடி கொடுத்துவிட்டு ரூ.425 கோடிக்கு கணக்குப்போட்டார்கள். சாலை அமைக்க விடப்பட்ட டெண்டர்களில் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

Similar News