தி.மு.க. அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை! திருப்பூரில் 3 பேர் அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திமுக பிரமுகர் அலுவலகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்து வந்தவர்களை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்.

Update: 2021-12-05 02:13 GMT

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திமுக பிரமுகர் அலுவலகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்து வந்தவர்களை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்து சட்டம் இயற்றினார். அதன் பின்னர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எங்கும் விற்பனை செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு இடங்களில் மீண்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல ஏழை அப்பாவி தொழிலாளர்கள் இதில் தங்களின் பணத்தை இழந்து உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறுபடியும் விற்பனை செய்யக்கூடாது என்பது ஒட்டமொத்த மக்களின் கோரிக்கையாகும்.


இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், எம்.ஜி.பி. தியேட்டர் அருகே உள்ள திமுக வார்டு உறுப்பினர் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3 பேர் கையும் களவுமாக பிடிப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திமுக வார்டு செயலாளர் மனோகரன் தலைமையில் லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News