காவிரி பிரச்சினையில் 50 ஆண்டுகளாக அரசியல் செய்வது யார்?-பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கடந்த 2014க்கு முன்னர் 139 அரசு மருத்துவக்கல்லூரியும், 205 தனியார் மருத்துவக்கல்லூரியும் இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் 289 அரசு மருத்துவக்கல்லூரியும், 269 தனியார் மருத்துவக்கல்லூரியும் உள்ளது. அதில் தமிழகத்துக்கு மட்டும் 11 புதிய மருத்துவக்கல்லூரியை பாஜக அரசு வழங்கியுள்ளது.

Update: 2021-08-02 02:54 GMT

காவிரி பிரச்சனையை வைத்து திமுக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அரசியல் செய்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

இது பற்றி அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் வரவேற்பு தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது.

மருத்து படிப்பில் மத்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையை எந்த காலத்திலும் நிறைவேற்றியதே இல்லை. அவர்கள் கடந்த 1967ம் ஆண்டு தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றியது இல்லை. அதே போன்று நீட் தேர்வு விவகாரத்திலும் மாணவர்களை ஏமாற்றாதீர்கள். இதில் திமுக அரசியல் செய்யக்கூடாது.      

கடந்த 2014க்கு முன்னர் 139 அரசு மருத்துவக்கல்லூரியும், 205 தனியார் மருத்துவக்கல்லூரியும் இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் 289 அரசு மருத்துவக்கல்லூரியும், 269 தனியார் மருத்துவக்கல்லூரியும் உள்ளது. அதில் தமிழகத்துக்கு மட்டும் 11 புதிய மருத்துவக்கல்லூரியை பாஜக அரசு வழங்கியுள்ளது.

காவிரி பிரச்சினையில் திமுகவினர் 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகின்றனர். நாங்கள் மேகதாது அணையை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/02054916/DMK-in-NEET-exam-Dont-do-politicsInterview-with-PonRadhakrishnan.vpf








Tags:    

Similar News