மனைவியின் ஊராட்சித் தலைவர் பதவியை தன் பதவியாக போட்டுக்கொண்ட தி.மு.க அமைப்பாளர் - விழுப்புரம் தி.மு.க அட்ராசிட்டி

மனைவியின் ஊராட்சித் தலைவர் பதவியை தன் பதவியாக பெயர் போட்டுக் கொண்ட தி.மு.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-28 02:03 GMT

மனைவியின் ஊராட்சித் தலைவர் பதவியை தன் பதவியாக பெயர் போட்டுக் கொண்ட தி.மு.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமண்டலம் அருகே உள்ளது நவமால் கப்பேர் ஊராட்சி, இங்கு தி.மு.க'வின் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளராக இருக்கும் சின்னத்தம்பி என்பவர் மனைவி மணிமேகலை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தில் சின்னத்தம்பியின் தலையீடுகள் அதிகம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ'வுமான உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை தி.மு.க'வினர் ஆங்காங்கே விளம்பரங்களை வைத்து கொண்டாடினர்.

அதன்படி நேற்றைய தினம் நவமால் கப்பேர் ஊராட்சியில் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக விளம்பர பலகை வைக்கப்பட்டது. இந்த விளம்பர பலகையில் வாழ்த்துரை வாசகங்களை பதிவிட்டு சின்னத்தம்பி அப்பகுதியில் பேனர்களை அடுக்கியுள்ளார்.

சின்னத்தம்பியின் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் பொழுது தன்னுடைய புகைப்படத்தின் கீழே ஊராட்சி மன்ற தலைவர் என குறிப்பிட்டு பேனர் அடித்துள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source - Junior Vikatan

Similar News