திருப்பூர்: மாமூல் தர மறுத்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு.. தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் அடாவடி.!

திருப்பூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை செய்ய சென்ற விவசாயியை தடுத்து திருப்பி அனுப்பிய திமுக ஊராட்சி மன்றத் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-01 13:00 GMT

திருப்பூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை செய்ய சென்ற விவசாயியை தடுத்து திருப்பி அனுப்பிய திமுக ஊராட்சி மன்றத் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.


 



அதன்படி பொதுமக்கள் இருக்கும் வீடுகளின் அருகாமையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் வரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காய்கறி மற்றும் மளிகை கடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய முறையாக அனுமதி பெற்ற விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக பெருமா நல்லூர் வந்தபோது அவரை, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சி.டி.வேலுசாமி தடுத்து மாமூல் கேட்டுள்ளார்.


 



விவசாயி தர மறுக்கவே தங்கள் பகுதிக்குள் வெளிநபர்கள் வந்து எந்த பொருளையும் விற்ககூடாது என்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து பெருமாநல்லூர் காவல்துறையினர் தலையிட்டபோது, அவர்களையும் இதில் தலையிடக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த பின்னரும் திமுகவினர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News