செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆந்திர காவல் நிலையங்களில் மட்டும் 12க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். ஆரம்பக் காலம் முதல் செம்மரக் கடத்தல் செய்யும் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரின் நெட்வொர்க் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தானே தனியாக தொழில் தொடங்கினால் கோடி, கோடியாக கிடைக்கும் என்று ஓட்டுநர் தொழிலை விட்டுவிட்டு பல ஆண்டுகளாக செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் ஆந்திரா காவல் நிலையங்களில் மட்டும் 12க்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதால் அ.தி.மு.க.வில் நுழைய முயற்சி செய்தார் ஆனால் அக்கட்சியில் இடம் வழங்கப்படவில்லை.
ஆந்திர தமிழக எல்லையில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளைக் கடத்திய கும்பலில் போளூர் திமுக ஒன்றியக் குழுத் தலைவியின் கணவர் சிக்கியுள்ளார்.#Crime #Pushpa #DMK pic.twitter.com/AHLefh5jdY
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 2, 2022
இந்நிலையில், பெருமாளின் பார்வை தி.மு.க. பக்கம் திரும்பியது. அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி சாந்தியை ஒன்றியக்குழு உறுப்பினராக போட்டியிட வைத்து அதில் வெற்றியும் கண்டார். மேலும், ஒன்றியக்குழுத்தலைவராகவும் அவரது மனைவி சாந்தியை வெற்றிப் பெற வைத்தார். அதன்பின்னர் ஒன்றியங்களில் நடைபெறும் அனைத்து பணிகளையும் பெருமாளே கவனித்து வந்தார்.
இதனிடையே ஒன்றிய அலுவலகத்தில் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் ஒருவரின் பணிநிறைவு விழாவிற்காக பெருமாள் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவரை ஆந்திர போலீசார் மடக்கி கைது செய்தனர். ஆளும் கட்சியின் பிரமுகர் ஒருவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu