விவசாயிகள் மீது கபடநாடகம் ஆடும் திமுக.. துணை முதலமைச்சர் ட்விட்.!

விவசாயிகள் மீது கபடநாடகம் ஆடும் திமுக.. துணை முதலமைச்சர் ட்விட்.!

Update: 2020-12-02 18:02 GMT

தமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில்தான் அனுமதி அளித்தது. இதனை அதிமுக ஆட்சி தடை விதித்து விவசாயிகளை காத்துள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் மீது அக்கறை உள்ளதுபோன்று இப்போது கபடநாடகம் ஆடும் திமுக தான் 04.01.2011 அன்று மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து தமிழக விவசாயிகளுக்கு கடுமையான துரோகத்தை இழைத்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு 17.7.2013 அன்று தடை விதித்து விவசாயிகளின் நலனை காத்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான்.

விவசாயிகளின் நலன் காக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 20.02.2020 அன்று சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது மாண்புமிகு அம்மாவின் அரசு. இதனை தமிழக மக்கள் நன்கு அறிவர். விவசாயிகளின் பாதுகாவலன் அம்மா அவர்களின் அரசு மட்டுமே. எனவே திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் சூழலில், அதிமுக அரசு மத்திய அரசின் வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
அதனை விமர்சித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் சட்டத்திற்கு அதிமுக அரசு வாக்களித்ததாகவும். விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பன்னீர்செல்வம் இந்த பதிவு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News