முதலமைச்சர் தாயார் மட்டுமின்றி, அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தும் தி.மு.க. ராசாவுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!
அதிலும் நேற்றைய தினம் திமுக துணை பொதுச்செயலாளர் ராசா பேசிய பேச்சு மிகவும் கண்டனத்துக்குரிய விஷமாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் தவசியம்மாள் குறித்து மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மிகவும் தரம் தாழ்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுகவின் பேச்சாளர்கள் முதல் நிர்வாகிகள் அனைவரும் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.
அதிலும் நேற்றைய தினம் திமுக துணை பொதுச்செயலாளர் ராசா பேசிய பேச்சு மிகவும் கண்டனத்துக்குரிய விஷமாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் தவசியம்மாள் குறித்து மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசினார். ராசாவின் பேச்சுக்கு பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை. தந்தைப் பெரியாரின் திருவுருவப் படத்தை பின்னணியில் வைத்துக் கொண்டு பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
அரசியல் கட்சிகளின் மக்கள்நலப் பணிகளை மக்கள் எடை போடுவதற்கான களம் தேர்தல்கள் தான். அத்தகையத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலான குறைகளையும் மக்கள் மன்றத்தின் முன் வைத்து அவர்களின் ஆதரவைத் திரட்டுவது தான் அறமாக இருக்கும். அது தான் நாகரீகமும் ஆகும்.
ஆனால், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் தாக்குதல்களையே திமுக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. சசிகலாவையும், முதலமைச்சரையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறி திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் இந்த பரப்புரையில் இத்தகைய அணுகுமுறையை தொடங்கி வைத்தார்.