"எப்பாவது நீங்க தனித்து போட்டியிட்டுருக்கீங்களா?" - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கிடுக்கிப்பிடி கேள்வி - திருதிரு'வென முழிக்கும் அறிவாலயம்!

கூட்டணி இல்லாமல் கடந்த காலங்களில் பா.ஜ.க-வால் போட்டி போட முடிந்தது, ஆனால் தி.மு.கவால் முடியுமா? என்று அண்ணாமலை சவால் விடுத்து இருக்கிறார்.

Update: 2023-01-01 14:09 GMT

தமிழகத்தில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட தயார் என்றும், கடந்த காலங்களில் கூட தனித்து போட்டி போட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள். குறிப்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டி இட்டால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்று முதல்வர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். அதை நினைவு கூர்ந்த அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், 1967-ம் ஆண்டு தி.மு.க முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல.


சுதந்திரக் கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளுடன் கூட்டணியின் காரணமாகத்தான் அன்றைக்கு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல, 12 கட்சிகளுடன் கூட்டு வைத்ததால் மட்டும்தான். இது சாத்தியமானது என்று கூறியிருந்தார். மேலும் எதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் முதலமைச்சர் என்பதையும் குறிப்பிட்டார்.


பிரதமர் மோடி தலைமையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க நிச்சயமாக மாபெரும் வெற்றி பெறும் என்றும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க தனித்து போட்டி போட்டதுண்டு. மேலும் வருங்காலங்களிலும் அதை செய்ய தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டி போட தி.மு.க தயாரா? என்று அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்து இருக்கிறார்.

Input & Image courtesy:Maalaimalar

Tags:    

Similar News