வடநாட்டுக்காரனை நம்பியுள்ளது திமுக.. நாங்கள் அப்படி இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

வடநாட்டுக்காரனை நம்பியுள்ளது திமுக.. நாங்கள் அப்படி இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

Update: 2020-11-19 19:21 GMT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர் என்று ஒரே நாளில் ஏழு தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது அதிமுக கட்சி.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி கூட்டத்தில் பேசியதாவது: அதிமுக கட்சி மாவட்டத்துல எங்க ஆலோசனை நடத்தினாலும் கிடா வெட்டி, கறி விருந்துடன் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணக்கூடிய இயக்கம் அதிமுகதான்.

ஏழு தொகுதிகளிலும், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டோம். அவர் மேலும், ‘’திமுகவினர் வடநாட்டுக்காரனை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களா வந்து ஓட்டு போடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News