தி.மு.க. ஒன்றிய செயலாளர் அபகரித்த நிலத்தை திருப்பி தாருங்கள்.. ஸ்டாலினிடம் மனு கொடுத்த பெண்.!

தி.மு.க. ஒன்றிய செயலாளர் அபகரித்த நிலத்தை திருப்பி தாருங்கள்.. ஸ்டாலினிடம் மனு கொடுத்த பெண்.!

Update: 2021-02-14 18:54 GMT

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் பெண்ணிடம் இருந்த நிலத்தை அபகரித்தது தொடர்பாக ஸ்டாலினின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், வடக்கு பொய்கை நல்லூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தி, இவரது கணவர் ராஜேந்திரன். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி அப்பெண் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், ஐயா, கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் என்னிடம் அபகரித்த நிலத்தை பெற்று தரவும், வேளாங்கன்னி, பூக்காரத் தெருவில் அமைந்துளள் புல எண் 4/6ல் முப்பத்தின் ஒன்பதரை சென்ட் நிலத்தை அபகரித்துள்ளார். எனவே அதனை திரும்ப பெற உதவி செய்ய வேண்டுகிறேன். உண்மையுள்ள வசந்தி என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போராரு என்ற நிகழ்ச்சியிலும் அப்பெண் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவினருக்கு நிலம் அபகரிப்பது என்பது புதிதல்ல. அவர்களின் பழக்கம் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. ஆட்சிக்கு வராமலே இப்படி நிலத்தை அபகரித்து வருகின்றனர். ஒரு வேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களின் நிலை என்னா ஆகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது போன்றவர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களை நிராகரிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Similar News