"விடியா அரசே கேளுங்க இதை" - ஸ்டாலினுக்கு எடப்பாடி அறிவுரை !

Update: 2021-10-15 10:15 GMT

"போக்குவரத்து நெரிசலைக்‌ குறைத்திட கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு உடனடியாகத்‌ திறக்க வேண்டும்‌ என்று இந்த விடியா அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என எடப்பாடி பழனிசாமி தி.மு.க'வை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில்‌ கோயம்பேடு சாலை சந்திப்பில்‌ போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவே மிகப்‌ பெரிய உயர்மட்டப்‌ பாலம்‌ 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டுவதற்கு ஒப்புதல்‌ தரப்பட்டு, 95 சதவீதப் பணிகள்‌ 2020 டிசம்பர் மாதத்தில்‌ முடிவுற்றிருந்தன. தற்போது பாலப்‌ பணிகள்‌ 99.99 சதவீதம்‌ முடிவுற்ற நிலையில்‌, பாலம்‌ பயன்பாட்டிற்குக்‌ கொண்டு வரப்படாத காரணத்தால்‌, தினந்தோறும்‌ பொதுமக்கள்‌ போக்குவரத்து நெரிசலில்‌ சிக்கி அவதியுறுகின்றனர்‌.

குறிப்பாக, நேற்றைக்கு முன்தினம்‌ (13.10.2021 ) நவராத்திரி பண்டிகையை முன்னிட்டுத் தொடர்‌ விடுமுறை காரணமாக, சென்னையில்‌ பணிபுரியும்‌ பிற மாவட்டங்களைச்‌ சோந்த மக்கள்‌ ஒரே சமயத்தில்‌ கோயம்பேடு பேருந்து நிலையத்தில்‌ முற்றுகையிட்ட நிலையில்‌, மிகக்‌ கடுமையான போக்குவரத்து நெரிசல்‌ ஏற்பட்டு பொதுமக்கள்‌ பெரும்‌ சிரமத்திற்கு ஆளாகினர்‌ என்ற செய்திகள்‌ வெளிவந்துள்ளன.

எனவே, பாலப்‌ பணிகள்‌ முடிக்கப்பட்ட நிலையில்‌, கோயம்பேட்டில்‌ போக்குவரத்து நெரிசலைக்‌ குறைத்திட கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு உடனடியாகத்‌ திறக்க வேண்டும்‌ என்று இந்த விடியா அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News