"பல வருஷமா தி.மு.க'விற்காக உழைச்ச என்கிட்டயே 15% கமிஷன் கேட்குறீங்களா?" - கொந்தளித்த 67 வயது நிர்வாகி !

Update: 2021-11-13 07:30 GMT

உள்ளாட்சிதுறை ஒப்பந்தங்களில் 15 சதவிகித கமிஷன் தொகை தி.மு.க தலைமை கேட்கிறது என தி.மு.க'வின் பொதுக்குழு உறுப்பினர் ஒருவரே குற்றச்சாட்டு எழுப்பிய விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.

கமிஷன் தொகை, லஞ்ச ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற வார்த்தைகள் தி.மு.க தமிழகத்தை ஆட்சி செய்யும் போது அதிகம் பேசப்படும் வார்த்தைகளாக உள்ளது. காரணம் இதுபோன்ற செயல்கள் தி.மு.க ஆட்சிகாலத்தில் அதிகம் நடைபெறுவதே காரணம். அந்தவகையில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஒருவரே தி.மு.க தலைமை 15 சதவிகிதம் கமிஷன் உள்ளாட்சிதுறை ஒப்பந்தங்களில் கேட்கிறது என புகார் எழுப்பியது பரபரப்பாகியுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த சத்தியமூர்த்தி.க என்கிற தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "நானும் எனது மனைவி குமுதவள்ளியும் முன்னால் பொதுக்குழு உறுப்பினர்கள் . எனது மனைவி குமுதவள்ளி முன்னாள் பேரூராட்சி நலைவர் (1996-20011) வரை, நான் பேரூர் கழக இரண்டு முறை செயலாளர், திருச்சி மண்டல தொலைபேசி ஆலோசனை குழு தலைவர் ஆகிய பொருப்புகளில் இருந்த எனக்கு ஆலங்குடி பேரூராட்சியில் வருகின்ற அரசு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு நான் டென்டர் போட்டால், 15 சதவீதம் பணம் தனியாக லஞ்சம் கேட்கின்றனர். இதற்கு தற்போது உள்ள பேரூர் கழக செயலாளர், என்னிடம் பணம் இல்லை என்றால் வேலை இல்லை என கூறுகிறார். மேலிடத்திற்கு நான் பணம் வாங்கி தான் வேலையை உறுதி செய்ய முடியும் என்று கூறுகின்றார். எனவே. எனக்கு வயது 67 ஆகிறது. கழகத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய எனக்கு இந்த நிலை என்றால் எப்படி கட்சி வளர்ச்சி அடையும். அதுவும் தற்போது பேரூராட்சி தேர்தல் வரக்கூடிய நேரத்தில் இது போன்ற செயல்களால் கட்சி பலவீனம் அடையும் என இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும், இது போன்ற செயல்களுக்கு காரணமானவர்களை மேலிடமாக இருந்தாலும், தங்கள் தலைமையில் இயங்கும் தமிழகம் தலை நிமிர உடனே ஆவண செய்ய தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 



ஊரார் தி.மு.க கமிஷன் கேட்கிறது, அரசுப்பணத்தை லஞ்சமாக உபயோகப்படித்துகிறது என யாராவது கூறினால் "எங்களை குறித்து தப்பா பேசுகிறீர்கள்" என தாண்டி குதிக்கும் தி.மு.க'வினர் இப்படி தலைமை பொதுக்குழு உறுப்பினரே புகார் எழுப்பியதற்கு என்ன பதில் கூற போகின்றனர்?

Tags:    

Similar News