தி.மு.க கொள்கைகளை பரப்புகிறதா கல்வி TV? மாணவர்கள் நிகழ்ச்சியில் கருப்பு,சிவப்பு காட்சி?

பள்ளிக்கல்வித்துறையின் கல்வி டி.வி நிகழ்ச்சியில் தி.மு.க கொடியின் வண்ணத்தை பரப்புவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2022-10-06 02:51 GMT

தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த ஒன்றை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள், நிர்வாகக் குளறுபடி மற்றும் முரண்பாடு போட்டிகள் அதிகாரிகளின் ஆரோக்கியம் மற்ற செயல்பாடுகள், ஆளும் கட்சியினரின் ஆதிக்கம் போன்றவற்றால் பள்ளி துறை மீதான நம்பிக்கையை குறைந்து வருகின்றது. இந்நிலையில் கல்வி TV நிகழ்ச்சியில் ஒன்றில் ஆளும் தி.மு.க கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள் காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


ஆசிரியர் ஒருவர் மாணவ மாணவியருக்கு செயல்வழி கற்றல் குறித்து நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிய சொல்கிறார். இந்த இரண்டு குழுக்களையும் கருப்பு, சிவப்பு நிறங்களில் டிவியில் காட்சிப்படுத்துகின்றனர். அதன் பின்னர் ஊதா, சிவப்பு வண்ணம் மாற்றப்படுகிறது. இந்த காட்சிகளில் சர்ச்சை ஏற்படப்பட்டுள்ளது.


ஆளும் கட்சியாக தி.மு.க உள்ளதால் தி.மு.க ஆட்சியின் கொள்கை பரப்பு டி.வி போன்று தமிழக அரசின் கல்வி TVயை பயன்படுத்த துவங்கி விட்டதாக செய்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. கட்சிக்கு ஆதரவான நிகழ்ச்சி தயாரிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு துணை போகின்றனாரா? என்றும் ஜாதி, மதம், கட்சி பெய்தமின்றி படிக்கும் மாணவர்களிடம் ஆளும் கட்சி தங்களுடைய செல்வாக்கை புகுத்த நினைக்கிறதா? என்பது குறித்தும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News