தி.மு.க தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது - சுப்ரமணியன் சுவாமி
தி.மு.க தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்ரமணியசாமி கூறினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் முன்னாள் எம்.பியும், பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியசுவாமி பிறந்தநாள் விழா நேற்று மதுரையில் நடந்தது. இந்த விழாவில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் பேசுவதில், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளையர்கள் அளித்ததால் பொருளாதாரத்தில் பின்தங்கி சென்றோம். தற்பொழுது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்து இருப்பது இதற்கு முக்கிய காரணம்.
ஆங்கிலேயர்கள் ஆரியம்- திராவிடன் என்று பிரிவினை உண்டு ஆக்கிவிட்டார்கள். திராவிடம் என்பதில் திராவிடத் என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். இது திராவிடமாக மாறியதோ ஆரியன் திராவிடன் என்று வார்த்தை சமஸ்கிருதத்தில் இல்லை. மொழிகளில் தமிழ் முக்கியம்தான் இந்தியம் கற்றுக் கொண்டால் என்ன தவறு கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. இந்தி கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஏன் தடை போடுகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்புகிறேன். மொழியை வைத்து இந்த நாட்டை யாரும் பிடிக்க முடியாது.
தமிழகத்தின் அரசின் கையில் இருக்கும் 32 ஆயிரம் கோவில்களை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது சார்பாக நோட்டீஸ் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு தற்போது வரை தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தி.மு.க தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பா.ஜ.க வரும், அடுத்து சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அடிக்கடி தமிழகம் வந்து தி.மு.க அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Hindu News