தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை - பிரேமலதா விஜயகாந்த்
தருமபுரியில் தே.மு.க.தி. சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாயைம்புதூர், சேஷம்பட்டி, அகரம் கூட்ரோடு, தொப்பூர் கணவாய் உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தே.மு.தி.க. குரல் கொடுத்து வருகிறது. எனவே கேப்டன் விஜயகாந்த் ஆணைப்படி ஒவ்வொரு ஊரில் நடைபெறும் பிரச்சனையை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.
ஏற்கனவே தருமபுரி மாவட்டத்திற்காக பல பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே நக்ஸலைட்டுகள் உருவானார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களுக்கு தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெண்களுக்கு மாதம் ரூ.1,000, நகைக்கடன் தள்ளுபடி இது போன்று எண்ணற்றவை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi