1 கோடி லஞ்சம் கேட்ட தி.மு.க ! ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த பட்டியலின பெண்!
கடையம் ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் திமுவின் அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் திமுவின் அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் முருகன் மனைவி செல்லம்மாள் வெற்றி பெற்றார். திமுக அறிவித்த வேட்பாளர் ஜெயக்குமார் குறைவான ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். கட்சி அறிவித்த வேட்பாளரை தோல்வியடைய செய்த கட்சியின் ஒன்றிய செயலாளர் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். வெற்றிபெற்ற செல்லம்மாள் ஒன்றியக்குழு தலைவராக பொறுப்பேற்றார்.
இதனிடையே நேற்று மாலை அவர் பதவியை ராஜினாமா செய்தார். தென்காசி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹெலனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அவர் வீடியோவில் கூறுகையில், திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தம்மிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டார். இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்யும்படி கூறினார். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றார். திமுகவில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்குவது தலைவிரித்தாடும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
Source: Social Media
Image Courtesy:Puthiyathalaimurai