"அவரால் முதல்வராகவே முடியாது" - மு.க.ஸ்டாலினை பொளந்து கட்டிய மு.க.அழகிரி - உச்சக்கட்ட குழப்பத்தில் தி.மு.க தொண்டர்கள்!
"அவரால் முதல்வராகவே முடியாது" - மு.க.ஸ்டாலினை பொளந்து கட்டிய மு.க.அழகிரி - உச்சக்கட்ட குழப்பத்தில் தி.மு.க தொண்டர்கள்!
முன்னாள் தி.மு.க தலைவரின் மகன் மு.க.அழகிரி. தி.மு.க-வில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர். மத்திய அமைச்சராக இருந்தவர். ஆனால், 2014-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தூண்டுதலால் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார்.
2017-ஆம் ஆண்டு கருணாநிதி அவர்களின் மறைவுக்கு பிறகு அவரின் அரசியல் ஆட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் கடந்த இரண்டு வருடமாக அமைதி காத்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சட்டசபை தேர்தலில் தனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும் என கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக மதுரையில் பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதலே அழகிரியின் ஆதரவாளர்கள் திரண்டனர்.
மாலை ஆறு மணிக்கு மேல் மண்டபத்துக்கு வந்த மு.க.அழகிரி, கூடியிருந்த ஆதரவாளர்களுடன் பேசத் தொடங்கினார்.
அப்போது அவர், "திருமங்கலம் இடைத் தேர்தலிலின்போது மு.க.ஸ்டாலின் மதுரையிலுள்ள என் வீட்டிற்கு வந்தார். அப்போது அப்பாவிடம் சொல்லி பொருளாளர் பதவி கொடுக்கச் சொன்னார்கள் உடன் வந்தவர்கள். பேசி விட்டு வந்தார்கள் போல. உடனே அப்பாவிற்கு போன் செய்தேன், ஸ்டாலினுக்கு பதவி கொடுங்கள் என்றேன். அன்று மாலையே மு.க.ஸ்டாலின் பொருளாளர் ஆனார். முரசொலி நிர்வாகத்திற்காக நான் 1980-ஆம் ஆண்டு மதுரை வந்தேன். பி.டி.ஆர் மதுரை வரும் வழியில் இறந்து விட்டார் அப்போது நடந்த இடைத் தேர்தலில் கவுஸ் பாட்சா வெற்றி பெற்றார். திருமங்கலம் இடைத் தேர்தலை உலகமே வியந்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் நீங்கள் தான் வேலை பார்க்க வேண்டும் என கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டனர். அங்கு வெற்றி பெற்றோம். அங்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றோம் என கூறினர். பார்முலா இல்லை. கடின உழைப்பு. தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை வேண்டாம் என கூறினேன். அப்பாவுக்கு பிறகு நீ தான் முதல்வர் என்று நானே மு.க.ஸ்டாலினிடம் கூறினேன்.
இதைத்தொடர்ந்து "மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. என்னை பொதுக்குழுவை வருக என ஒரு நிர்வாகி போஸ்டர் ஒட்டினர். இது தவறா? மு.க.ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் ஒட்டி உள்ளனர். கண்டிப்பாக மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது" என்று கடுமையாக மு.க.ஸ்டாலினை பொளந்து கட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சகோதர யுத்தத்திற்கு மத்தியில் குழம்பி போயுள்ளனர் தி.மு.க மூத்த தலைவர்களும், தொண்டர்களும்.