முதல்வர் வரும் பக்கம் மட்டுமே வெள்ளை அடிக்கப்பட்ட சாலை - தி.மு.க அரசின் ஸ்டாண்டப் காமெடிகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு புறம் மட்டுமே வெள்ளையடிக்கப்பட்ட சாலை.

Update: 2022-08-24 14:15 GMT

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கோவையில் ஈச்சனாரியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் சாலை வழியாக செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை. இந்த சாலையில் அமைந்துள்ள தடுப்புச்சுவர் மிகவும் மங்கல் அடைந்து இருந்தது. இதன் காரணமாக தி.மு.க நிர்வாகிகள் மாநகராட்சி இடம், இதுபற்றிக் கூறி விரைவில் சாலைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று கூறினார்கள். இதன் காரணமாக சாலை ஒரு புறம் மட்டுமே வெள்ளையடிக்கப்பட்ட முழுமையாக காணப்பட்டது. 


சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் மீது ஒரு புறம் மட்டுமே அதாவது முதல்வர் செல்லும் பக்கம் மட்டுமே வர்ணம் பூசப்பட்டு இருந்தது. மறுபக்கம் எந்த ஒரு வர்ணமும் அடிக்கப்படாமல் மங்கிய நிறத்தில் இருந்தது. இதற்கான புகைப்படத்தில் செல்வகுமார் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது மிகவும் வைரலானது. அதாவது நேற்று முதல்வர் செல்லும் வழி முழுக்கவும் உள்ள ஒரு பக்கத்தில் வெள்ளையடிக்க சாலை புத்தம் புதிதாக காட்சியளித்தது. 


இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவிவருகிறது. முதல்வர் செல்லும் பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வர்ணம் பூசப்பட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதனால் மீதம் இருக்கும் சுவற்றிற்கு தி.மு.க நிர்வாகம் கண்டு காணாத வகையில் அலட்சியமாகவே செய்துள்ளது. இது பற்றிய செய்திகள் வைரலாகி உடன் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி முழுமையாக இரண்டு பக்கமும் வர்ணம் பூசி தன்னுடைய வேலையை நிறைவு செய்தது. 

Input & Image courtesy: News

Tags:    

Similar News