தி.மு.கவின் போங்கு தேர்தல் வாக்குறுதி! விவசாயக் கடன் தள்ளுபடி வரலாறு இது தான்!

தி.மு.கவின் போங்கு தேர்தல் வாக்குறுதி! விவசாயக் கடன் தள்ளுபடி வரலாறு இது தான்!

Update: 2020-12-18 18:00 GMT

கடந்த லோக்சபா தேர்தலில் "வெற்றி பெற்றால் விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம். எனவே பெண்கள் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று தி.மு.க இளைஞரணித் தலைவர் ‌உதயநிதி தூண்டி விட்டார். ஆனால் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றும் அது பற்றி மூச்சுக் கூட விடவில்லை. இது ஒன்றும் தி.மு.கவுக்கு புதிதல்ல.

விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நாடகம் மட்டுமே போடுவது தான் தி.மு.கவின் வழக்கம். விவசாயக் கடன் விஷயத்திலும் அது தான் நடந்து வருகிறது. 2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு‌.க, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அப்போது தமிழகம் முழுவதும் இருந்த கிட்டத்தட்ட 4000 கூட்டுறவு வங்கிகளில் ₹6526 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன் வழங்கப்பட்டு இருந்தது. 

2007ஆம் ஆண்டு நிதியமைச்சராக பதவி வகித்த கருணாநிதியின் உற்ற தோழர் அன்பழகன், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை 8% வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு வழங்கும் என்று பட்ஜெட் உரையில் வாக்குறுதி அளித்தார். அதற்கு நிதிக்கு எங்கே போவது? மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கதவுகளைத் தட்டியது தி.மு.க.

இவர்களுக்கு சலுகை அளித்தால் பிறகு ஒவ்வொருவராக வருவார்கள் என்று காங்கிரஸ் அரசு உதவி செய்ய மறுத்து விட்டது. கூட்டுறவு வங்கிகளின் நிலை அம்போ! 2008ஆம் ஆண்டு வரை எதுவும் நடக்கவில்லை. ஆனால் தி.மு.கவின் அதிர்ஷ்டம், 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஆட்சியை மீண்டும் பிடிக்கும் ஆவலில் ₹60,000 கோடி மதிப்பிடப்பட்ட விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

 

இதில் தி.மு.க தள்ளுபடி செய்வதாக அறிவித்த ₹6526 கோடியும் அடக்கம். ஆனால் பணம் வந்ததா? அது தான் இல்லை. 7 ஆண்டுகள் கழித்து 2016ல் அ.தி.மு.க அரசு ₹6095 மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தது. இதை செயல்படுத்த முனைந்த போது தான் காத்திருந்தது அதிர்ச்சி. இதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலில் 2006ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதாக வரையறுக்கப்பட்ட கடன்களில் 80% கடன்கள் புது பட்டியலில் வந்தன.

ஆக மொத்தம் விவசாயக் கடன்களை தி.மு.கவும் தள்ளுபடி செய்யவில்லை; காங்கிரசும் தள்ளுபடி செய்யவில்லை. வெற்று வாக்குறுதி மட்டுமே கொடுத்திருக்கின்றன. 80% கடன்கள் வாராக் கடனானால் என்ன ஆகும்? மீண்டும் கடன் கொடுக்க வழியில்லாமல் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடியைச் சந்தித்தன. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டது. இது தான் தி.மு.கவும் காங்கிரசும் விவசாயிகளை ஆதரிக்கும் லட்சணம். தி.மு.க கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்று இப்போது புரிகிறதா?
 

Thanks: https://twitter.com/ikkmurugan/status/1339304363584471041?s=20 

Similar News