தி.மு.க'வின் ஓராண்டு நிறைவு - உதயநிதிக்கு கிடைக்கப்போவது பள்ளி கல்வித்துறையா அல்லது ஊரகவளர்ச்சித்துறையா?

தி.மு.க பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் உதயநிதியை அமைச்சராக்க அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.;

Update: 2022-05-04 07:30 GMT

தி.மு.க பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் உதயநிதியை அமைச்சராக்க அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தி.மு.க பொறுப்பேற்று வருகிற 7ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு செய்கிறது இந்த சூழலில் தற்போது தி.மு.க அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக இரண்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பு ஏற்க உள்ளதாக பேசப்படுகிறது இதில் முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் மன்னார்குடியில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா ஆகிய இருவரும் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டிற்கு மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்ய முதலமைச்சர் திட்டமிட்டு இருக்கிறார் என பேசப்படுகிறது.

அந்த திட்டம் மூலம் அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளிக்கல்வித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறை இருப்பதாகவும், ஐ.பெரியசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் செந்தில் பாலாஜி அந்த பொறுப்பு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் சக்கரபாணி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Source - News 18 Tamil Nadu

Similar News