தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாக வந்த வெற்றி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அராஜகத்தின் அத்தியாயம் திமுக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் இரு சட்டசபை தேர்தல்கள், இரு லோக்சபா தேர்தல்கள், இரு ஊரக உள்ளாட்சி தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சி தேர்தலை திமுக அரசு இரண்டு கட்டங்களாக நடத்த முயல்கிறது ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது. திமுக அரசும் தேர்தல் ஆணையமும் ஒன்றாக கரம் கோர்த்து வாக்காளர்களை துச்சமென மதித்து செயல்பட்டிருக்கிறது.
ஓட்டுப்பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தும், உரிய நடவடிக்கையை எடுக்க தவறியிருக்கிறது. பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மிகவும் தாமதமாக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தாமதப்படுத்தி இருக்கிறார்கள். பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்புக் காட்டவில்லை. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள்.