தொழில் செய்யுங்கள்.. இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்.. சன்டிவிக்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க., எம்.பி.!
தொழில் செய்யுங்கள்.. இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்.. சன்டிவிக்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க., எம்.பி.!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்த சாதனைகள் குறித்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்ற வாசகங்கள் அடங்கிய காட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இந்த விளம்பரத்தை திமுகவினர் நடத்தும் சன்டிவியிலும் ஒளிபரப்பினார்கள்.
இந்நிலையில், தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் சன்டிவியில் ஒளிபரப்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஒன்று தொழில் செய்யுங்கள், இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். உங்கள் செயலை தொண்டர்கள் இலேசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். என பதிவிட்டிருந்தார்.
தற்போது இவரது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக ஐடிவிங்கை சேர்ந்தவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சன்டிவி மட்டுமின்றி உங்கள் கலைஞர் தொலைக்காட்சியிலும் விளம்பரம் கொடுப்போம் என கூறியுள்ளனர். தற்போது இந்த ட்விட்டர் பதிவை சன்டிவி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.