அரசியலில் இருந்து விலக தயாரா? தி.மு.க மாவட்ட செயலாளருக்கு ஓ.பி.எஸ் மகன் சவால்!
அரசியலில் இருந்து விலக தயாரா? தி.மு.க மாவட்ட செயலாளருக்கு ஓ.பி.எஸ் மகன் சவால்!;
தன் மீது ஒரு சதுர அடி நிலம் என் பெயரில் இருந்தால் அதனை நீங்கள் நிரூபிக்கத் தவறினால் உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள தயாரா என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, கேரள மாநிலத்தில் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்கள் இருப்பதாகவும், அதனை கேரளாவில் ஏதோ ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டதாகவும், அதனை சுட்டிக்காட்டி பொய்யான தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். பல முறை பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் தமிழக மக்களையும் பத்திரிகைகளையும் ஏமாளிகள் என நினைத்துக்கொண்டு வழக்கமான பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார்.
இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கேரளாவிற்கு அழைக்கும் இடத்திற்கு நான் செல்கிறேன். எங்களுடன் பத்திரிகையாளர்களும் வரட்டும், அந்த இடத்தில் நாங்கள் உண்மையாகவே சொத்து சேர்த்து இருக்கிறோம் என்று ஆதாரபூர்வமாக ஒரு சதுர அடி அளவுக்கு நிலத்தை காண்பிக்கட்டும்.
அந்த சொத்து முழுவதையும் நான் அவருக்கே கொடுத்து விடுகிறேன். அப்படி எங்களுக்கு சொத்துக்கள் இல்லை என்று நிரூபிக்கத் தவறினால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை விட்டு விட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.
இதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்று பத்திரிகை நண்பர்கள் நீதிபதிகளாக இருந்து கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இவர் பேட்டி தேனி மாவட்டத்தில் வைரலாக பரவி வருகின்றது. அ.தி.மு.க. தி.மு.க. நேரடி போட்டியாக தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் விளங்கும் என கூறப்படுகிறது