"உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான வரலாறு தெரியுமா?" - ஸ்டாலினுக்கு பதிலடி தந்த முதல்வர்!
"உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான வரலாறு தெரியுமா?" - ஸ்டாலினுக்கு பதிலடி தந்த முதல்வர்!
"நான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும் உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா?" என தி.மு.க தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில் கூறியதாவது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க'வை உடைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார்.
ஆனால், மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடும் அனைத்து சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட்டன. தற்போது கூட வரும் 27'ம் தேதிக்கு பின், பழனிசாமி முதல்வராக இருப்பாரா எனககூறி வரும் ஸ்டாலின், ஏற்கனவே, இந்தஆட்சி ஒரு மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும், ஒரு வருடத்தில் கவிழும் என ஆருடம் கூறி வந்தார்.
ஆனால், நான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அ.தி.மு.க தான் வெற்றி பெறும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நாட்டை பற்றியே தெரியாத தலைவர் ஸ்டாலின். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாராக உள்ளாரா? துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் விவாதத்திற்கு தயாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் ஊர்ந்து வந்து முதலமைச்சர் ஆனேன் என ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எந்த எக்ஸ்பிரசில் எப்படி வந்தார். எப்படி முதலமைச்சரானார் என்று மக்களுக்கு தெரியும்" என ஸ்டாலினுக்கு பதிலடி தரும் விதமாக தி.மு.க'வின் சரித்திரத்தை அசராமல் எடுத்துரைத்தார்.