'முள்ளிவாய்க்காலில் படுகொலையில் யாருக்கு பங்கு இருக்கு தெரியுமா?' - இலங்கை துரோகத்தை ஞாபகப்படுத்தும் வானதி சீனிவாசன்
'முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்ததற்கு நீங்கள் சொல்லுகின்ற மாடலுக்கும் பங்கு உண்டு' என ஆளும் தி.மு.க அரசை வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.;

'முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்ததற்கு நீங்கள் சொல்லுகின்ற மாடலுக்கும் பங்கு உண்டு' என ஆளும் தி.மு.க அரசை வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ'வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, 'சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்த சங்கடங்களும் வரக்கூடாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். அங்கு எங்களால் முழுமையான கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறோம் நாங்கள் பேசுவது முழுமையாக வருவதில்லை கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'நான் பேசுவதைக் கூட நெருக்கி, நெருக்கி சில விஷயத்தை மட்டும் தான் ஒளிபரப்புகின்றனர். தி.மு.க அமைச்சர்கள் பதில் அளிப்பதை முழுமையாக ஒளிபரப்பு செய்கின்றனர். இதனால் மக்களுக்கு நாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியவில்லை சபை குறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துக்களை விட்டுவிட்டு அனைத்தையும் ஒளிபரப்ப வேண்டும்' என்றார்.
'இலங்கைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம், அதே நேரத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும் முள்ளிவாய்க்கால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்ததற்கு நீங்கள் சொல்கிற மாடல்களுக்கும் பங்குண்டு.உங்களது கடந்த காலத்தை நினைத்து பாருங்கள் என ஒரு குறிப்பிட விரும்புகிறேன்' என்றார்.