"500 ரூபாய் மாமூல் குடுக்காம என்னடா கடை நடத்துற?" - மாமூல் கொடுக்காத பா.ஜ.க தொண்டர் டிபன் கடையை அடித்து உடைத்த தி.மு.க'வினர்
மாமூல் கொடுக்காத பாஜக தொண்டர் டிபன் கடையை அடித்து உடைத்த திமுகவினர்
தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் நன்கொடை கேட்டு பொதுமக்களை மிரட்டி பெறுவது வாடிக்கையாகி வருகிறது. பல இடங்களில் ரோட்டின் ஓரத்தில் கடை போட்டு அன்றாடம் வியாபாரம் செய்து பிழைத்து வருபவர்களிடம் 100 ரூபாய் கொடு 500 ரூபாய் கொடு என மிரட்டி பணம் பறித்து வருவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்க முடிகிறது.
கோயம்பேட்டில் டிபன் கடை நடத்தி வந்த பாஜக தொண்டர் நன்கொடை தர மறுத்ததால் அவரது கடையை திமுக நிர்வாகிகள் சூறையாடி உள்ளனர், கோயம்பேடு சோமத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் இவர் கோயம்பேடு அருகே தள்ளுவண்டி கடையில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 127 வது வட்ட இளைஞர் அணி செயலாளரான முத்து மற்றும் திமுக உறுப்பினர் விஸ்வநாதன் ஆகியோர் சபரிமலை ஐயப்பனுக்கு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி கடந்த ஜனவரி 3ம் தேதி கோயம்பேடு சந்தை அருகே உள்ள தள்ளுவண்டி கடைகளில் வசூலித்து வந்தனர்.
அப்பொழுது தேவேந்திரன் இடம் 500 ரூபாய் கட்டணம் அராஜமாக கேட்டுள்ளனர், அதற்க்கு தேவேந்திரன், 'என்னங்க 500 ரூபாய் கேட்குறீங்க? வியாபாரமே இல்லைங்க, பணம் இல்லை எனக் கூறியுள்ளார். உடனே திமுகவினர், 'பணம் கொடுக்கவில்லை என்றால் கடை போட முடியாது, எங்களுக்கு பணம் கொடுக்காம நீ தொடர்ந்து கடை எப்படி நடத்துகிறாய் என பாத்துடுறோம்' என மிரட்டியுள்ளனர். மேலும் அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களில் இரவு நேரத்தில் திமுக கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் தனது கூட்டாளியுடன் சென்று தேவேந்திரன் கடையை அடித்து, உடைத்து நொறுக்கி உள்ளார்.
சில ஆயிரங்களில் முதலீடு செய்து தினமும் சில 100 ரூபாய் சம்பாதிக்கும் தேவேந்திரன் கடையை அவரின் கண்முன்னே அடித்து திமுகவினர் நொறுக்கியுள்ளனர். 500 ரூபாய் மாமூல் தராத காரணத்தினால்ஒருவரின் பிழைப்பையே அடித்து காலி செய்தனர் திமுகவினர்.
கோயம்பேடு காவல் நிலையம் அருகே நடந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் தேவேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து நன்கொடை கேட்டு மிரட்டிய கோயம்பேடு சோமாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த திமுகவினர் விஸ்வநாதன் மற்றும் முத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.