அன்று ஹிந்தி தெரியாது போடா! இன்று 'சோட்டு' என சிலிண்டர் அறிமுகம்! - தி.மு.க'வின் ஹிந்தி பல்டி அரசியல்கள்

ஹிந்தி தெரியாது போடா தி.மு.க சொல்லிவிட்டு தற்பொழுது சோட்டு என சிறிய வகை சிலிண்டர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-07 14:49 GMT

ஹிந்தி தெரியாது போடா தி.மு.க சொல்லிவிட்டு தற்பொழுது சோட்டு என சிறிய வகை சிலிண்டர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கூட்டுறவு நகர சங்கம் மற்றும் சென்னை மாநகரில் 12 எரிவாயு கிளைகளை நடத்தி வருகிறது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோகம் மற்றும் மனித பயன்பாட்டிற்கான எரிவாயு உருளைகளை விநியோகம் செய்து வருகிறது. இச்சேவையின் அடுத்த கட்டமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர்களை சங்கத்தின் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றிற்கு 'முன்னா' மற்றும் 'சோட்டு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை சிலிண்டர்களை தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தினார். இந்தி தெரியாது போடா என டி-ஷர்ட் களில் பதிந்து விளம்பரம் தேடிய தி.மு.க'வின் அமைச்சர் தற்போது இந்தி பெயரில் வைக்கப்பட்டுள்ள எரிவாயு உருளைகளை விழாவில் அறிமுகப்படுத்தியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.



Source - Asinet News

Similar News