தி.மு.க.விற்கு ஓட்டு போடுவது.. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே அசுரன் கைவைத்த கதையாகிடும்: தேர்தல் பரப்புரையில் டாக்டர் ராமதாஸ் அதிரடி.!

கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுகவை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பரப்புரைக்கு முதன் முறையாக வெளியில் வந்துள்ளார்.

Update: 2021-03-20 02:30 GMT

கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுகவை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பரப்புரைக்கு முதன் முறையாக வெளியில் வந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் தெள்ளார் பகுதியில், காரில் அமர்ந்தவாரே பிரச்சாரம் மேற்கொண்டார். கொரோனா தொற்று காரணமாக மக்களை சந்திக்க முடியாமல் அவதியுற்றேன். தற்பொழுது உங்களை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.


 



இதன் பின்னர் அதிமுக, பாமக, பாஜக, தமாகா அங்கம் வகிக்கிற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை தரும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுத சுரபி என குறிப்பிட்டார். அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும்.

ஆண்டுக்கு 6 சிலிண்டர், குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1,500 கொடுக்கிறார்கள். முதியோர் உதவித்தொகை ரூ.2,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மிஞ்ச தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை என்று மிகவும் பெருமிதத்துடன் கூறினார்.




 


தேர்தலுக்காக தனியாருடன் தொடர்பு வைத்துள்ளது திமுக என்று மிக கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவிற்கு வாக்களித்தால், வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே அசுரன் கையை வைக்க முயன்ற கதையைப் போல் ஆகிவிடும். எனவே அதிமுக கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News