உச்சநீதிமன்ற நீதிபதியாகும் சுந்தரேஷ் ! வரலாற்று தீர்ப்புகளை வழங்க ராமதாஸ் வாழ்த்து !
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசரான எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு நீதியரசர் உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் 9 நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் மத்திய அரசு நியமித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் பணியாற்றி வந்த நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்களும் ஒருவர் ஆவார். ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் இராமசுப்பிரமணியன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மனவருத்தம் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதியரசர் சுந்தரேஷ் அவர்களின் நியமனம் மிகுந்த மனநிறைவை அளித்திருக்கிறது.
நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு அனைத்து வகைகளிலும் தகுதியானவர். 23-ஆவது வயதில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட அவர், 29-ஆவது வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர். விசாரணைகளின் போது அவர் முன்வைத்த துல்லியமான வாதங்கள் பல தருணங்களில் நீதிபதிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் சிறப்பாக வழக்குகளை நடத்திய அவர், 2009-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்துள்ள நீதியரசர் சுந்தரேஷ், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏராளமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்; அவற்றில் பல முன்மாதிரி தீர்ப்புகள் ஆகும்.