விநாயகர் கோவில் கும்பாபிஷேக யாகசாலையை கடப்பாரையை கொண்டு இடிக்க சென்ற திராவிடர் கழகத்தினர் - ஈரோட்டில் கருப்பு சட்டை போட்டுகொண்டு அட்டூழியம்

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யாகசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து யாகசாலையை இடிக்க முயன்ற திராவிடர் கழகத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-02 03:01 GMT

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யாகசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து யாகசாலையை இடிக்க முயன்ற திராவிடர் கழகத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் கூட்டத்தை சமாளிக்க போதுமான இட வசதி இல்லாததால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்புறமும் உள்ள இடத்தில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கடப்பாரை, மண்வெட்டி, கம்பி போன்ற கருவிகளை கையில் ஏந்தியவாறு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையை நாங்களே சென்று அகற்றுவோம் என கூக்குரலிட்டனர்.

மேலும் அவர்கள் 'மத சார்பின்மை கடைபிடிக்கும் திராவிட அரசுக்கு இது ஏற்புடையதாக இல்லை' எனக்கு கூறியும் கோஷங்களை ஏற்பட்டன. மேலும் கோஷங்களை எழுப்பிக்கொண்டே யாகசாலை அகற்றப்போவதாக கூறி அங்கிருந்து மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட கருவிகளை கொண்டு அவர்கள் விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையை இடிக்க கிளம்பினர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தற்போது அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரோட்டில் யாகசாலையை கடப்பாரையை வைத்து திராவிடர் கழகத்தினர் இடிக்க சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News