தொன்மையான தமிழ் மொழியில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற எல்.முருகன்!
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார். இதனையடுத்து அவர் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக முறைப்படி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவருக்கு குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழில் உறுதிமொழி ஏற்றார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல்.முருகன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் என்று உறுதிமொழி ஏற்றார்.
Source: BJP TN President Annamalai Face Book
Image Courtesy:ANI