மறைமுகமாக கட்சியை கைப்பற்றும் டிடிவி, சசிகலாவின் எண்ணம் பலிக்காது.. கிருஷ்ணகிரியில் முதல்வர் பேச்சு.!
மறைமுகமாக கட்சியை கைப்பற்றும் டிடிவி, சசிகலாவின் எண்ணம் பலிக்காது.. கிருஷ்ணகிரியில் முதல்வர் பேச்சு.!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பரில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சேலம் செல்வதற்காக கிருஷ்ணகிரி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக தொண்டர்களுடன் உரையாற்றினார். அவர் பேசியதாவது: சசிகலாவும், டிடிவி தினகரனும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரு போதும் கட்சியில் சேர்க்கப்படமாட்டார்கள். அவர்கள் மறைமுகமாக கட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளனர்.
ஒரு போதும் அவர்களின் எண்ணம் நிறைவேறாது. இதனை தொண்டர்களும் விரும்பவில்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் தனது உரையை முடித்துக்கொண்டு தருமபுரி மாவட்டம், காரிமங்லம் தேசிய நெடுஞ்சாலையில், உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முதலமைச்சரை மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அப்போது அந்த கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றிவிட்டு சேலம் புறப்பட்டு சென்றார்.