ஸ்டாலின்'தான் வராரு, குடிசையை தூக்கிட்டு ஓரமா போங்க - முதல்வர் வருகையால் அகற்றப்பட்ட ரோட்டோர குடிசைகள்

முதல்வர் வருகையின் காரணமாக ரோட்டோர குடிசைகள் அகற்றப்பட்டு மக்கள் வீடு இன்றி தவிக்கிறார்கள்.

Update: 2022-08-24 14:17 GMT

பொள்ளாச்சிக்கு தமிழக முதல்வர் வருகை தரும் காரணத்தினால் ரோட்டின் ஒரத்தில் இருக்கும் குடிசைகள் திடீரென்று அகற்றப்பட்டன. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தற்போது ரோட்டில் தவிக்கிறார்கள். பொள்ளாச்சி கோயம்புத்தூர் சாலையில் அமைந்துள்ள ஆச்சி பட்டி என்ற கிராமத்தில் ரோட்டோரத்தில் உள்ள, ஏழை மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் கொடுமைகளை திடீரென்ற தி.மு.க நிர்வாகம், முதல்வர் வருகின்ற காரணத்திற்காக அவர்களுடைய குடிசைகளை அகற்றி உள்ளார்கள். இதனால் வீடின்றி தவிக்கும் ஏழை மக்கள் எங்கு போவதென்று தெரியாமல் அங்கு உள்ள பகுதிகளில் வீதிகளில் அமர்ந்துள்ளார். 


தங்களுக்கு என்று வீடு இல்லாத காரணத்தினால் இவர்கள் இங்கு குடிசை போட்டு தங்கி அங்கு இருக்கும் சிறு தொழில்களை செய்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வந்து அவர்களை காலி செய்ய சொன்னதுடன் அவர்களுடைய குடிசைகளை அகற்றி விட்டது தி.மு.க நிர்வாகம். அந்த ஏழை மக்கள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் அமர்ந்து உள்ளார்கள். அரசு அதிகாரிகள் நீங்கள் இங்கு தங்க கூடாது என்று கூறி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். அதன் பெயரில் மக்களை தங்களுடைய குடிசைகளை அகற்றி உள்ளார்கள். 


தனியார் இடங்களில் குடிசை அமைத்து வாழ்ந்தோம். ஆனால் அவர்கள் எங்களை காலி செய்யச் சொன்னார்கள். போதிய வசதி இல்லாததால் நாங்கள் தற்போது ரோட்டோரத்தில் குடிசை போட்டு தங்கி இருக்கிறோம். ஆனால் இதை சில வாரங்களாக அதிகாரிகள் காலி செய்யச் சொல்கிறார்கள். போவதற்கு எந்த இடமும் இல்லாமல் நாங்கள் தற்போது ரோட்டில் இருக்கிறோம் என்று அங்குள்ள மக்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.  

Input & Image courtesy:



Tags:    

Similar News