சட்டசபையை பாரட்டுவிழா மேடையாக்கிய தி.மு.க - துரைமுருகனை மாறி மாறி பாராட்டிய நிகழ்வு !

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் பேச்சைக் கேட்ட துரைமுருகன், ஆனந்தத்தில் கண் கலங்கினார்.;

twitter-grey
Update: 2021-08-23 16:15 GMT
சட்டசபையை பாரட்டுவிழா மேடையாக்கிய தி.மு.க - துரைமுருகனை மாறி மாறி பாராட்டிய நிகழ்வு !

இன்றைய சட்டசபையை பாராட்டுவிழா மேடையாக்கினர் தி.மு.க'வினர்.

இன்றைய சட்டசபை நிகழ்வில் தி.மு.க அமைச்சர் துரைமுருகனை பாராட்டி சட்டசபையை பாராட்டுவிழாவாக மேடையாக மாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.

சட்டசபையில் பேசிய ஸ்டாலின் பேசியது, தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா நாயகனாக துரைமுருகன் வலம் வருவதாக கூறி பாராட்டினார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி இடத்தில் இருந்து தம்மை துரைமுருகன் வழி நடத்துவதாகவும் ஸ்டாலின் பாராட்டினார். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது முகத்தில் எப்போதும் புன்னகைக்கு குறைவிருந்ததில்லை. துரைமுருகன் அவர்களை எப்போதும் கருணாநிதி அவர்கள் துரை துரை என்றுதான் அழைப்பார். தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் எனக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வருகிறார் என நெகிழ்ந்து கூறிய ஸ்டாலின், கட்சிப் பாகுபாடு இன்றி பொன்விழா நாயகன் துரைமுருகனை அனைவரும் முன்வந்து இந்த பாராட்டு தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கூறினார். தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் பேச்சைக் கேட்ட துரைமுருகன், ஆனந்தத்தில் கண் கலங்கினார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News