முன்கூட்டியே தேர்தலா.? தேர்தல் ஆணையத்திடம் ரகசிய கோரிக்கை வைத்த அ.தி.மு.க.,!

முன்கூட்டியே தேர்தலா.? தேர்தல் ஆணையத்திடம் ரகசிய கோரிக்கை வைத்த அ.தி.மு.க.,!

Update: 2020-12-21 14:45 GMT

ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துமாறு அ.தி.மு.க., இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையக் குழு சென்னை வந்திருக்கிறது. இந்தக்குழு இன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது.

அப்போது தி.மு.க., தரப்பில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏப்ரல் 3 ஆவது அல்லது 4ஆவது வாரத்தில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்ததாகவும் மே மாதத்தில் அதிகமாக வெயில் இருக்கும் என்பதால் முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுத்ததாகவும் 500 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு செலுத்தும் வகையில் வாக்கு சாவடி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தலுக்காக ரூ.2,500 பணம் வழங்கப்படவில்லை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News