அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.;

Update: 2021-06-04 07:58 GMT
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.




 


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. இதனால் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது ஆட்சியை இழந்துள்ளது. இதனிடையே தோல்வி குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.




 


இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News