அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை.. எடப்பாடி பழனிசாமி கறார்.!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனிடையே அவர் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றார்.

Update: 2021-06-04 09:24 GMT

மேலும், அதிமுக அரசு கோதாவரி, காவிரி நதிகள் இணைப்பிற்கு முயற்சி செய்யப்பட்டது. இது பற்றி ஆந்திரா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் தெலங்கானா முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இது பற்றியும் பரிசீலனை செய்வதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். தற்போது நதி இணைப்பு குறித்து மாநில அரசுக்கு மத்திய நீர்வளத்துறை திட்டம் குறித்து அனுப்பப்பட்டுள்ளது. எனவே விரைந்து இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

அதிமுக கட்சியில் சசிகலா இல்லை. சட்டமன்ற தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அவர் அறிக்கை விட்டுள்ளார். சசிகலா அமமுகவினருடன்தான் செல்போனில் பேசி வருகிறார். அதிமுகவினருடன் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News