ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை (அக்டோபர் 20) சந்தித்து பேசுகிறார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

Update: 2021-10-19 10:46 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை (அக்டோபர் 20) சந்தித்து பேசுகிறார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த கடந்த 6 மாதங்களாக எதிர்க்கட்சினர் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து ஆளும் திமுக அரசு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது. சமீபகாலமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கு அதிமுக கடும் கண்டனங்களை பதிவி செய்தது. இந்நிலையில், நாளை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது எதிர்க்கட்சிகள் மீது திமுக வேண்டும் என்றே லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து மிரட்டுகிறது மற்றும் பொய் வழக்கு போடுகிறது உள்ளிட்டவைகளை பேசப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஆளும் கட்சியினரின் அராஜகம் தலைத்தூக்கியுள்ளது. எம்.பி.க்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதையும் சுட்டிகாட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

Source: Dinakaran

Image Courtesy:

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=713505

Tags:    

Similar News