அதிகாரியை தாக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.,வை எப்போது கைது செய்வீங்க: எடப்பாடி பழனிசாமி!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி ஆட்சிக்கு வந்தது முதல் திமுகவினரின் அட்டகாசம் எல்லை மீறிப் போயுள்ளது. காவல் துறையினரையும், அரசு அதிகாரிகளையும் மற்றும் பொதுமக்களையும் மிரட்டுவதும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது.

ரேஷன் கடைகளில் தலையீடு, சட்ட விரோதமாக மணல் அள்ளும்போது தடுக்கும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தாக்குவது; செய்யாத ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு பில் பாஸ் செய்யுமாறு உள்ளாட்சித் துறை அதிகாரிகளை மிரட்டுவது; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுவிக்க காவல் நிலையத்திற்கு கும்பலாகச் சென்று பணியில் இருக்கும் காவலர்களை மிரட்டி, அவர்களை மீட்பது; சாலை மற்றும் கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது; பணி மேற்பார்வையிடும் பொறியாளர்களை மிரட்டுவது என்று, அனைத்துத் துறைகளிலும் திமுகவினரின் சட்ட விரோதச் செயல்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளிவருகின்றன.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
— AIADMK (@AIADMKOfficial) January 29, 2022
தொடர்ந்து அரசு அலுவலர்களையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜக போக்கை உடனே நிறுத்த வேண்டும் ! pic.twitter.com/MCBrk7aef1
நேற்றைய (28.1.2022) ஆங்கில நாளேடு ஒன்றில், திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., குறித்த செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. கடந்த புதன்கிழமை (26ம் தேதி) இரவு மாநகராட்சி ஒப்பந்ததாரர், திருவொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் என்ற இடத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சாலை போடும் பணியை மாநகராட்சிப் உதவிப் பொறியாளர் மேற்பார்வை செய்கிறார். அந்த சமயத்தில் ஒப்பந்ததாரர் தன்னை வந்து முறைப்படி பார்க்காததால் ஆத்திரமடைந்த திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ., தனது அடியாட்களுடன் சென்று சாலைப் பணிகளை நிறுத்தியுள்ளார். சாலை போடும் பணியை மேற்பார்வை செய்த சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளரையும், பணியாளர்களையும் மிருகத்தனமாகத் தாக்கி விரட்டியுள்ளார் என்று அந்தப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.