தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டு 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டு 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே இன்று சென்னையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.