எதிர்கட்சிகளின் சதிகளை முறியடித்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி.!
எதிர்கட்சிகளின் சதிகளை முறியடித்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி.!
தமிழக முதலமைச்சராக 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி பதவி ஏற்றார். ஜெயலலிதா மறைந்த பின்னர் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். இதன் பின்னர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு தனது பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதனிடையே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் இன்று வரை கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ஆட்சி 2 மாதங்களில் கவிழ்ந்து விடும், 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் பேசி வந்தார். ஆனால் அதனை எல்லாம் தவிடுபொடியாக்கி தொடர்ந்து 5 வது ஆண்டில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வருகிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் நடைமுறை படுத்தி வருகின்றார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலமாக மருத்துவ கனவுகளை நிறைவேற்றினார். இதனால் தமிழக விவசாயிகளிடம் மட்டுமின்றி ஏழை எளிய மக்கள் மனிதிலும் எடப்பாடி பழனிசாமி பாராட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.