"நேரடியாக குடுக்கும் மனுவையே ஒழுங்கா படிக்க தெரியாது" - ஸ்டாலினை பங்கம் செய்த எடப்பாடியார்

"நேரடியாக குடுக்கும் மனுவையே ஒழுங்கா படிக்க தெரியாது" - ஸ்டாலினை பங்கம் செய்த எடப்பாடியார்

Update: 2021-02-10 06:30 GMT

"உங்களுக்கு நேரடியா குடுக்குற மனுவையே படிக்க தெரியாது" என ஸ்டாலினை பங்கம் செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் இரு முதல்வர் வேட்பாளர்களும் தத்தம் பிரச்சாரங்களில் எதிர் அணியை சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றன.

அந்ந வகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரச்சார மேடையில் மனுகளை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டி இதை நான் ஆட்சிக்கு வந்தவுடன் பிரித்து உடனே தீர்வு கான்பேன் என பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதனை பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கம் செய்து விமர்சித்தார். அப்போது அவர்,  "ஸ்டாலின் கூறுகிறார் நாங்கள் ஆட்சிக்கு வந்து மனுக்களை படித்து உடனே நடவடிக்கை எடுப்போம் என! நீங்க எப்ப ஆட்சிக்கு வர்றது? எப்ப மனுக்களை படிக்கிறது?" என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், "நீ நேரடியாக குடுக்கும் மனுவையே சரியாக படிக்க தெரியலை! இதுல பெட்டில போடுற மனு என்ன பண்ண போறீங்க?" என பங்கம் செய்தார்.

மேலும் பேசிய அவர், "இதை நான் சொல்ல கூடாது! இருந்தாலும் வரும் வழியில் என் கழக தோழர்கள் கேட்டார்கள் நீங்கள் ஏன் இதனை கூற மாட்டேன் என்கிறீர்கள் என? ஒரு தலைவரை பற்றி அப்படி பேச கூடாது என நான் இருந்தேன்" என்றார்.

இறுதியாக அவர், "எங்கள் ஆட்சியில் 1100 என்ற எண்ணை அழுத்தினால் மக்கள் குறைகள் நேரடியாக தீர்க்கப்படும் என பின் ஏன் மனு?" என பிரச்சாரம் செய்தார்.

Similar News