மக்களின் நன்மையை தவிர எல்லாத்தையும் யோசிப்பது தி.மு.க - அண்ணாமலை காட்டம்

பள்ளிக்கல்வித்துறை தி.மு.க நிகழ்ச்சிகளில் ஆள்பிடிப்பு வேலை செய்வதற்காக,வேலை செய்கிறதா?

Update: 2022-08-25 10:32 GMT

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது தி.மு.க கட்சியினர் மக்களுக்கு நன்மை செய்வதை தவிர தங்களுடைய சொந்த கட்சிகள் என்ன செய்யலாம்? என்பதை தான் தீவிரமாக யோசித்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தி.மு.க செல்லும் கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. இதனை கண்டித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணி என்ன? என்பது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கேள்வி கேட்டார்.


மேலும் அவருடைய சுற்றறிக்கையில் இதுபற்றி கூறுகையில், "கோவையிலும், ஈரோட்டிலும் நடந்து வரும் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு மக்களை அழைத்து வருவதற்காக அனைத்து பள்ளி வாகனங்களையும் கொடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது ஒரு சுற்றறிக்கையை அனுப்பியதாக நான் அறிகிறேன்" என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டார்.


எனவே பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை நோக்கமே குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது, அவர்களுக்கு ஒழுக்கத்தை புகட்டுவது தான். ஆனால் அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக ஆட்களைப் பிடித்து கொண்டு வருவதற்கு பள்ளிக்கல்வித்துறை முன் வரிசையில் நிற்கிறது. ஆட்களைப் பிடித்து கொடுக்கும் வேலை செய்தான் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை பணியா? என்ற கேள்வியும் அவர் தற்போது முன்வைத்துள்ளார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News