ஈகோவால் ‘கிஷான்’ திட்டத்தை தடுத்தவர்.. மம்தா மீது பாஜக தலைவர் பாய்ச்சல்.!

ஈகோவால் ‘கிஷான்’ திட்டத்தை தடுத்தவர்.. மம்தா மீது பாஜக தலைவர் பாய்ச்சல்.!;

Update: 2021-02-06 17:38 GMT

மேற்கு வங்கத்தில் ஈகோவால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கிஷான் சலுகைகளை தடுத்தவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், மால்டா மாவட்டத்தில் இன்று விவசாயிகள் பேரணி நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசியதாவது: இந்த மாநிலத்தில் பிரதமர் கிஷான் திட்டத்தை விவசாயிகள் பயன் அடைய விடாமல் தடுத்து மிகப்பெரிய அநீதி இழைத்துள்ளார். மம்தாவின் ஈகோதான் காரணம்.
மத்திய அரசின் பல்வேறு வகையில் கிடைக்க வேண்டிய சலுகைகளை விவசாயிகளுக்கு கிடைக்காமல் செய்து விட்டார்.

கிட்டத்தட்ட 70 லட்சம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இரண்டு ஆண்டுகளாக தடுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதன் காரணமாகவே விவசாயிகள் திரிணாமுல் காங்கிரசை வெறுத்து வருகின்றனர். வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக மம்தா தற்பபோது நிதியுதவி அளிப்பதாக கூறியுள்ளார். இந்த தேர்தலில் மம்தா கட்சிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் ஜே.பி.நட்டா பேசினார்.
 

Similar News